முள்ளிவாய்க்கால் நினைவுதூபி: மீண்டும் நாட்டப்பட்டது அடிக்கல்!இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபிக்கு மீண்டும் அதே இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னால் உண்ணாநிலைத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்  சிறிசற்குணராஜா இன்று அதிகாலை சந்தித்து உரையாடியுள்ளார். சந்திப்பு அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்திற்கான அடிக்கல் இன்று காலை 7 மணியளவில் நாட்டப்படும் என உறுதி மொழியை வழங்கியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.இதன் பிரகாரம் மாணவ தலைவர்கள் முன்னிலையில் இன்று காலை நினைவேந்தல் தூபிக்கான அடிக்கல் அதே இடத்தில் நாட்டப்பட்டுள்ளது.


No comments