உள்ளூரில் கொவிட்:வெளியே சுற்றுலா?


உள்ளுர் மக்கள் வீடுகளினுள் முடங்கியிருக்க சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து வேடிக்கை காண்பிப்பதில் மும்முரமாகியிருக்கின்றது இலங்கை. அரசு.

இதன் தொடர்ச்சியாக ஜேர்மனியில் இருந்து 500 சுற்றுலா பயணிகள் அடுத்த கட்டமாக வரவுள்ளனர்.

இந்த மாத இறுதியில் சுற்றுலா பயணிகளின் வருகைக்கு நாட்டை திறப்பதற்கான  தயாரிப்பில் தொடங்கப்பட்ட பைலட் திட்டத்தின் கீழ் சுமார் 500 ஜேர்மன் சுற்றுலா பயணிகள் இந்த மாதம் நாட்டிற்கு வர உள்ளனர் என்று சுற்றுலா அமைச்சு செயலாளர் எஸ்.ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.

கோத்தாவின் நண்பரும் மிக் விமான மோசடியினில் முன்னைய அரசினால் கைது செய்யப்பட்டவருமான உதயங்கவின் நிறுவனத்தை இலக்கு வைத்தே சுற்றுலா பயணிகள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

உக்ரேனிலிருந்து மட்டும் 2,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 500 பேர் ஏற்கனவே நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.  சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில் ஆரம்ப குறைபாடுகள் இருந்தபோதிலும் அரசாங்கம் இந்த திட்டத்தினை தொடரும் என்று அவர் கூறினார்.


No comments