கந்தபுரம் கரும்புத்தோட்டம்:கந்தறுந்த கதை?



சமூகத்தில் முன்னுதாரணமாக முன்னிறுத்தப்பட்டு வரும் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி, மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர் மா.ஜெயராசா, வைத்தியர் தி.குமணன் உள்ளிட்டவர்கள்

கிளிநொச்சி கரும்பு தோட்ட காணியின் வருமானங்கள் முறையாக அரச வருமானமாக்கப்படாது சுரண்டப்படுவது அம்பலமாகியுள்ளது.இது தொடர்பில் தகல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல தகவல்கள் கோரப்பட்டு ஆவண ரீதியில் தகவல்கள் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது.


குறித்த காணியானது கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்டபட்ட கந்தபுரம் பகுதியில் அமைந்துள்ளது. 196 ஏக்கர் அளவு கொண்ட குறித்த காணியில் 1983ம் ஆண்டுகாலப்பகுதியில் கரும்பு செய்கைக்கசாக குத்தகையாக பெறப்பட்டுள்ளது. 1983ம் ஆண்டுடன் கரும்பு செய்கை நிறுத்தப்பட்டு தெங்கு மற்றும் உப உணவு பயிர் செய்கை மேற்கொள்ளபட்டுவந்துள்ளமை வெளிச்சத்தக்கு வந்துள்ளது. அரசினால் குத்தகை ஒப்பந்தத்தின் நோக்கத்திற்கு மாறாக பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டமையானது குறித்த குத்தகை ஒப்பந்தத்தை மீறியதாகவே கருத முடியும்.


இதேவேளை 25.06.2020 வரையான காலப்பகுதிவரை குறித்த காணியானது எந்தவொரு நபருக்கும் குத்தகைக்கு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள தரப்பினர் அத்துமீறிய செய்கையை மேற்கொண்டுள்ளதாகவே கருத முடிகின்றது. இதன் பின்னால் பல அரச அதிகாரிகளின் பின்புலம் காணப்படுகின்றமையும் தற்போது அம்பலமாகியுள்ளது.


கிளிநொச்சி சீனி உற்பத்தி வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தினால் வெளிப்படுத்தப்பட்ட அறிக்கையில் கீழ்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 1964ம் ஆண்டு குறித்த நிறுவனம் 200 ஏக்கர் காணியில் அதன் தொழிலை ஆரம்பித்தது எனவும் அதில் கரும்பு செய்கை மேற்கொள்ளப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதில் 1983ம் ஆண்டுக்கு பின்னர் குத்தகை ஒப்பந்தத்திற்கு மாறாக உப உணவு செய்கையும், தெங்கு பயிர் செய்கையும் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளமை வெளிப்படுகின்றது. அவற்றுக்கு இன்று வான் உயர்ந்து காட்சியளிக்கும் தென்னை மரங்கள் சான்று பகிர்வதுடன், செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள பகுதிகளாக இன்றும் வயல் நிலங்கள் காணப்படுகின்றன. குறித்த விடயத்தினை அப்பிரதேச மக்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். 1980ம் ஆண்டுக்கு பின்னர் 2009 வரை கோபாலசிங்கம் என்பவர் பணிப்பாளராக இருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் குறிதத் நபர் 2008ம் ஆண்டு காலப்பகுதியிலேயே குறித்த பகுதியை விட்டு வெளியேறியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


35 வருட நீண்ட கால குத்தகை மீண்டும் புதிப்பிக்க வேண்டிய தேவை ற்பட்ட நிலையில் மீண்டும் குறித்த காணியை சீனி உற்பத்தி நிலைய தேவைக்காக பயன்படுத்துவதற்கு புதிய இயக்குனர் சபையை அமைத்து அப்போதைய கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு இணை தலைவர்களாக இருந்த சிவி விக்னேஸ்வரன், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றம் பாதுகாப்பு அமைச்சர் ஆகியுhரிடம் சிபாரிசு பெற்றதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதேவேளையில் குறித்த இயக்குனர் சபையில் வடக்கில் முக்கிய பொறுப்புக்களில் உள்ள அரச உத்தியோகத்தர்களும் இடம்பிடித்துள்ளமையும் பகிரங்க வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

யாழ் புhதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி, மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர் மா.ஜெயராசா, வைத்தியர் தி.குமணன் உள்ளிட்ட பல வர்த்தகர்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.


இதேவேளை 5 வருடத்திற்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படும் மூவரினைக் கொண்ட பணிப்பாளர் சபையில் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தியும் உள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். குறித்த கரும்பு தோட்ட காணியை மாதிரி பண்ணையாக மாற்றம் செய்து பதிவு செய்யப்படாத ஓர் நிர்வாக கட்டமைப்பை உருவாக்கி முக்கிய பொறுப்புக்களில் உள்ள யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி போன்ற பெருந் தலைகள் முயற்சித்துள்ளமை தொடர்பில் பிரதேச மக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் தற்போது எழுந்துள்ளது.


குறித்த சட்டவிரோத செயற்பாட்டுக்கு உதவிய கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட பலரினது உண்மை முகங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 


27.05.2020 அன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரினால் கரும்பு தோட்ட பணிப்பாளருக்கு அலுவலக ரீதியினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறிதத் கடிதத்தில் கரும்பு தோட்ட காணியில் 50 ஏக்கர் சிறுதானிய செய்கைக்கு நீர்பாசனம் வழங்க கூடியதாக உள்ளதாகவும், அக்கராயன் குளத்தின் சிறுபுhகத்தின் இறுதி நீர் விநியோக திகதியான 25.09.2020 குளத்தின் நீர்மட்டம் 5 அடியாக வரும்வரை இதில் எது முந்தியதோ அதுவாக அமையும் எனவும், இதனை கருத்தில் கொண்டு சிறுதானிய செய்கையை மேற்கொள்ளுமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் குறித்த காணி அரச காணியாகவும் எந்தவொரு நபருக்கும் குத்தகைக்க வழங்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் கரும்பு தோட்ட பணிப்பாளர் என முகவரியிட்டு அலுவலக ரீதியான கடிதம் ஒன்றை வழங்கியுள்ளமையானது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.


இதேவேளை குறித்த நிறுவனத்தினால் 10.06.2020 அன்று நீர்பாசன திணைக்களத்தின் பொறியியலாளருக்கு நீர்பாசன வாய்க்காலை திறந்து விடுமாறு எழுதப்பட்ட கடிதத்திற்கு நீர்பாசன திணைக்களமும் அனுமதி வழங்கியுள்ளத. அதற்கு அமைவாக கரும்பு தோட்ட காணி என பெயரளவில் குறிப்பிடப்படும் காணியில் இவ்வரும் 20 ஏக்கர் உழுந்து மற்றும் 10 ஏக்கர் கச்சான் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த செய்கைக்கான குத்தகை அல்லது வருமானம் அரச வருமானத்திற்கு கிடைத்திருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.



இதேவேளை 2 ஏக்கரில் கரும்பு செய்கையை மீண்டு ஆரம்பிப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் குறித்த நிறுவனத்தினால் குhரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கான சிபாரிசும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது



மேற்குறித்த விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக விண்ணப்பிக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மேலும் தகவல்கள் கிடைத்துள்ளது. குறித்த காணிக்கு 2017ம் ஆண்டுக்கு பின்னர் நீர் வினியோகம் செய்யப்பட்டது எனவும், 2020ம் ஆண்டு 50 ஏக்கரில் நிலக்கடலை மற்றும் உழுந்து செய்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை 2020ம் ஆண்டு 2 ஏக்கர் கரும் செய்கைக்கு அரசாங்க அதிபரின் அனுமதியுடன் நீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த நீர் வினியோகத்திற்கு அறவீடு எதுவும் பெறப்படவில்லை எனவும், கரும்பு தோட்ட காணி எனும் பெயரிலேயே வழங்கப்பட்டதாகவும் நீர்பாசன திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.



இவ்வாறு அரசாங்கத்திற்கு பெருமளவு வருமானத்தை மாவட்டத்திலிருந்து பெற்று கொடுக்க கூடிய கரும்பு தொட்ட காணி அரச உயரதிகாரிகள் மற்றம் அரச முக்கிய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளினால் சுரண்டப்பட்டு வந்துள்ளமை அம்பலமாகியுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் குறித்த சட்டத்துக்கு முரணான செயற்பாட்டுக்கு உடந்தையாக செயற்பட்டுள்ளமையும் அம்பலமாகியுள்ளதுடன், யாழ் போதனா வைத்தியாலையின் பணிப்பாள் த.சத்தியமூர்த்திக்கும் பெருமளவிலான பங்கு இலாபம் எட்டியுள்ளமையும் வெளிச்சத்தக்க வந்துள்ளது.


வருடம் ஒன்றுக்கு 2 கோடிக்கு மேல் இலாபம் பெறக்கூடிய கிளிநொச்சி கந்தபுரம் கரும்பு தோட்ட காணியை ஒரு சிலர் அபகரிக்க எடுத்தள்ள முயற்சிக்கு கடந்த காலங்களில் பல்வேறு தடைகள் இருந்து வந்துள்ளபோதிலும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக இருந்து மாற்றம் பெற்று வந்த சில காலப்பகுதிகளிலேயே அதற்கு இணங்கி செயற்பட்டுள்ளமையானது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது.


முல்லைத்தீவு மாவட்டத்தில் அவரது காலப்பகுதியில் முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராசா 12 ஏக்கருக்கு அதிக காணியை அழித்து சுவீகரித்தமை தொடர்பான உண்மை நிலையை மறைந்து அவரை பாதுகாத்தமையும் ஏற்கனவே வெளிச்சத்தக்கு வந்த விடயமாக உள்ளது. அவ்வாறான நிலையில் கிளிநொச்சி கந்தபுரம் கரும்பு தோட்ட காணியும் ஒரு சிலரது கரங்களிற்குள் அடங்கும் வகையில் ஏற்பாடுகள் இடம்பெறுகின்றதா என்ற சந்தேகமும் வலுப்பெற்றுள்ளது.


குறித்த அரச காணியானது சட்டத்துக்கு முரணான வகையில் சுவீகரிப்பதற்கு எடுக்கப்புடும் முயற்சி முறியடிக்கப்பட்டு அவை உரிய முறையில் பேணப்படவோ அல்லது பொது மக்களிற்கு நிபந்தனை அடிப்படையிலாகிலும் பகிரப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். குறித்த சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட அத்தனை அரச அதிகாரிகள் மீது விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் பலரினது வேண்டுகையாக அமைகின்றது.


No comments