விடாது மிரட்டும் கொரோனா?


பருத்தித்துறை பகுதியில் இன்று மந்திகை கண்ணகை அம்மன் ஆலயம் உட்பட உணவகம் மற்றும் பலசரக்கு கடை போன்றவற்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

பருத்தித்துறை புலோலி பகுதியில் ஒருவருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பருத்தித்துறை சுகாதார பிரிவினரால் மந்திகை கண்ணகை அம்மன் ஆலயம்,  சாரையடி வீதியில் அமைந்துள்ள உணவகம் மற்றும் பலசரக்கு கடை போன்றவற்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.  குறித்த தொற்றாளருடன் கண்ணகை அம்மன் ஆலய குருக்கள் நேரடி தொடர்பில் இருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்தே இவற்றிற்கு சீல் வைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே வவுனியா பட்டாணிசூர் பகுதியில் நேற்றய தினம் இரவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.


இதேவேளை பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா பசார் வீதி மற்றும் நகரில் உள்ள அனேகமான வியாபார நிலையங்களை நடாத்தி வருவதுடன் ஊழியர்களாகவும் பணியாற்றிவருகின்றனர்.

அதனை கருத்தில் கொண்டு இன்று(புதன்கிழமை) காலை வவுனியா பசார்வீதியின் ஒருபகுதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதிகள் இராணுவம் மற்றும் பொலிஸாரால் முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றுபவர்களிற்கு சுகாதார பிரிவினரால் முதற்கட்டமாக பிசீஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு வருகின்றது.

இதேவேளை குறித்த வீதிகளிற்குள் தமது தேவை நிமித்தம் பயணித்த பொதுமக்கள் அடையாள அட்டைகள் பரிசீலிக்கப்பட்டு, பட்டாணிசூர் பகுதியை சேராதவர்கள் பொலிஸாரால் வெளியில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

வவுனியா பட்டானிச்சூரை சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையில் இருந்து பட்டானிசூர் பகுதி பொலிஸாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது.


No comments