ஜநா விவகாரத்தில் தனிநபர் நலன்வேண்டாம்:அரவிந்தன்?



தத்தமது தனிப்பட்ட நலன்களை கைவிட்டு ஜநாவில் இலங்கை தொடர்பில் பொது தீர்மானமொன்றை கொண்டுவர தேசியம் சார்ந்து செயற்படும் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் தமிழர் விடுதலைக்கூட்டணி பிரமுகரான அரவிந்தன்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் இதேவேளை பொதுவான இணக்கப்பாடொன்றை தோற்றுவிக்க பாடுபடும் சிவில் தரப்புக்கள் மீது சிலர் உள்நோக்கங்கொண்டு விசமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் மக்களது கருத்தினை ஓரே நிலைப்பாட்டினை அனைவரும் ஒன்றிணைந்து முன்வைக்க வேண்டுமென்பதே எமது கோரிக்கையாகும்.

ஆனால் எவரும் தமது தனிநலன்கருதியோ தமது சொத்துக்களை பாதுகாக்கவோ அல்லது புதிதாக சேர்த்துக்கொள்ளவோ ஜநா தீர்மானத்தை நீர்த்துப்போகச்செய்யவேண்டாமெனவும்  அவர் கேட்டுக்கொண்டார்.

சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க இலங்கை அரசு மறுதலித்து வருகின்றது.காணாமல் போனோர் விவகாரம் காலங்கடந்தும் முடிவின்றி இழுபறிப்பட்டு செல்கின்றது.

வாதப்பிரதிவாதங்களை தாண்டி மனித உரிமைப்பேரவைக்கு எமது பிரச்சினையினை கொண்டு சென்று பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களிற்கு தீர்வொன்றை பெற்றுத்தரவேண்டியது வரலாற்றுக்கடமை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


No comments