சுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் அறிவிப்பு?

இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித

உரிமை ஆணையாளரது அறிக்கையினை வரவேற்றுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.   

அதேவேளை விடுதலைப்புலிகள் இயக்கத்தை காட்டி   கொடுத்து அழிக்க உதவியவர் சுரேஸ்பிறேமச்சந்திரன் எனவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார் .

நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  இன்று திங்கட்கிழமை நடத்திய ஊடக சந்திப்பில் ஈபீஆர்எல்எப் அமைப்பின் தலைவரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் அரசியல் விபச்சாரி எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்களால் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலையே அவர் இதனை தெரிவித்தார்.

அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது ஐ.நாவிற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வரைபில் இனப்படுகொலை என்ற வசனத்தை உள்ளடக்க ஆர்வம் காட்டவில்லை என்றும் சர்வஐன வாக்கெடுப்பை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விரும்பவில்லை எனவும்  பல்வெறு குற்றச்சாட்டுக்களை சுரேஸ்பிரேமச்சந்திரன் முன்வைத்திருந்தார்.

இது தொடர்பிலேயே அவரை அரசியல் விபச்சாரி என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


No comments