கஜமுத்து கடத்தலில் சிப்பாய்கள்?

 


யானை தந்தத்திலிருந்து  பெறப்பட்ட கஜமுத்தை சட்டவிரோதமாக வைத்திருந்த இராணுவ சிப்பாய்கள் இருவர், முல்லைத்தீவில் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர். 

வட்டுவாகல் பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் இவர்களைக்  கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவேளை தம் வசமிருந்த கஜமுத்துக்களை அவர்கள் விழுங்கியுள்ளனர்.

எனினும் கதிர்வீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவர்களில் ஒருவரின் வயிற்றில் கஜமுத்து இருப்பது மருத்துவரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கஜமுத்துவை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளார்கள்.

மேற்குறித்த இருவரும் தெற்கில் இருந்து வியாபார நோக்கத்துக்காக கஜமுத்தினை முல்லைத்தீவுக்கு எடுத்து வந்திருப்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது


No comments