இலங்கை முழுவதும் இராணு ஆட்சி?



வடகிழக்கினை கடந்த 30வருடங்களாக இராணுவ ஆட்சியை பேணி வந்த தெற்கு அரசியல் மத்தியில் கோத்தா முழு இலங்கையினையும் இராணுவ ஆட்சியின் கீழ் கொண்டுவர முற்பட்டுள்ளது.

அவ்வகையில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் நோக்கில் என்ற பெயரில் இணைப்பதிகாரிகளாக அனைத்து மாவட்டங்களுக்கும் தலா ஒரு இராணுவ உத்தியோகத்தர் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை மையத்தின் தலைவர், முப்படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கமைய, ஜனாதிபதி செயலகத்தினால் நேற்று முன்தினம் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார துறையினருடன் இணைந்து இந்த இராணுவ உத்தியோகத்தர்கள், கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணியுடன் செயலாற்றவுள்ளனர்.

மாவட்ட ரீதியில் தனிமைப்படுத்தல் நிலையங்களை பராமரித்தல், மருந்துகள், மருத்துவ வசதிகளை பெற்றுக் கொடுத்தல் மற்றும் நோயாளர்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் புதிய இணைப்பதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நியமிக்கப்பட்டுள்ள இணைப்பதிகாரிகளின் விபரம் வருமாறு:


வட மாகாணம்:


1. மேஜர் ஜெனரல் டப்ளியூ.ஜி.எச்.ஏ.எஸ்.பண்டார - யாழ்ப்பாணம்


2. மேஜர் ஜெனரல் கே.என்.எஸ். கொடுவேகொட - கிளிநொச்சி


3. மேஜர் ஜெனரல் ஆர்.எம்.பி.ஜி. ரத்நாயக்க - முல்லைதீவு


4. மேஜர் ஜெனரல் டப்ளியு.எல்.பி.டப்ளியூ. பெரேரா - வவுனியா


5. மேஜர் ஜெனரல் ஏ.ஏ.ஐ.ஜே.பண்டார - மன்னார்


வடமத்திய மாகாணம்:


6. மேஜர் ஜெனரல் ஜே.சி. கமகே - பொலன்னறுவை


7. மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம்.லியனகே - அனுராதபுரம்


வட மேல் மாகாணம்:


8. மேஜர் ஜெனரல் ஏ.பி.ஐ. பெர்ணான்டோ - புத்தளம்


9. பிரிகேடியர் பி.எம்.ஆர்.எச்.எஸ்.கே.ஹேரத் - குருணாகல்


மேல் மாகாணம்:


10. மேஜர் ஜெனரல் கே.டப்ளியூ.ஆர். டி. ஆப்றூ - கொழும்பு


11. மேஜர் ஜெனரல் என்.ஆர். லமாஹேவா - கம்பஹா


12. பிரிகேடியர் கே.என்.டி. கருணாபால - களுத்துறை


மத்திய மாகாணம்:


13. மேஜர் ஜெனரல் எச்.பி.என்.கே. ஜயபத்திரண - நுவரெலியா


14.மேஜர் ஜெனரல் எஸ்.எம்.எஸ்.பி.பீ. சமரகோன் - கண்டி


15. மேஜர் ஜெனரல் எஸ்.யூ.எம்.என். மானகே - மாத்தளை


சப்ரகமுவ மாகாணம்:


16. பிரிகேடியர் ஜே.எம்.ஆர்.என்.கே. ஜயமான்ன - இரத்னபுரி


17 பிரிகேடியர் ஏ.எல்.ஏ.ஜே.எல்.பீ. உதோவிய - கேகாலை


கிழக்கு மாகாணம்:


18. மேஜர் ஜெனரல் சி.டி. வீரசூரிய - திருகோண மலை


19. மேஜர் ஜெனரல் ரி.டி. வீரகோன் - அம்பாறை


20. மேஜர் ஜெனரால் சி.டி. ரணசிங்க - மட்டக்களப்பு


ஊவா மாகாணம்:


21.பிரிகேடியர் ஈ.ஏ.பி. எதிரிவீர - பதுளை


22.கேர்ணல் டி.யூ.என். சேரசிங்க - மொணராகலை


தென் மாகாணம்:


23. மேஜர் ஜெனரல் டி.எம்.எச்.டி.பண்டார - அம்பாந்தோட்டை


24. மேஜர் ஜெனரல் டப்ளியூ.ஏ.எஸ்.எஸ். வனசிங்க - காலி


25. கேர்ணல் கே.ஏ.யூ.கொடித்துவக்கு - மாத்தறை


No comments