விமான நிலையம் போய் ஊசி வாங்கினார் கோத்தா!இந்தியாவில் இருந்து வந்த கோவிட் -19 தடுப்பூசியை இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேரில் சென்று பெற்றுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியதன் விளைவாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்த ஆக்ஸ்போர்டு அஸ்ட்ரா-ஜெனெகா தடுப்பூசி 500,000 இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லி, விமான நிலையத்தில் இந்த தடுப்பூசியை ஜனாதிபதியிடம் சடங்கு முறையில் வழங்கினார்.

சுகாதார ஊழியர்களிடமிருந்து தொடங்கி நாளை முதல் இலங்கையில் தடுப்பூசி போடப்படவுள்ளது.


No comments