பலபக்கமிருந்தும் அரசியல் கைதிகளிற்கு குரல்?



தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாளை செவ்வாய்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை பொறுத்தவரை நல்லதொரு தீர்வு நிச்சயம் எட்டப்படும் என்று நம்புகின்றேன் என வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அனைவரும் கூட்டாக ஒரு கோரிக்கையினை இலங்கை ஜனாதிபதிக்கு சமர்ப்பியுங்கள் என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா ஆலோசனை தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் சூழ்நிலையில், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினர்கள் அனைவரும் இந்த விவகாரத்தில் ஓர் கூட்டான வேண்டுகோளை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க முடியுமானால் ஒருவேளை அது வெற்றியளிக்கக் கூடும்.

வடகிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு மாவட்டம் சார்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; மொத்தம் 28 பேர் பல்வேறு கட்சிகளின் சார்பில் உள்ளனர்.

மொத்தம் 28 தமிழ நாடாளுமன்ற  உறுப்பினர்களும் கூட்டாக ஒரே குரலில் உரிய கோரிக்கை ஒன்றை ஜனாதிபதியிடம் முன்வைத்தால், அதற்கு உரித்தான கணிப்பினை கருத்தில் கொண்டவராக, அவர் அதனை பரிசீலிக்க வேண்டி இருக்கும் எனவும் ந.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.


No comments