ஜனாஸா:அடக்கத்திற்கு இலங்கை அனுமதி?



கோவிட்-19 இனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பில் நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு தகனம் மற்றும் அடக்கம் இரண்டையும் உள்ளடக்கிய பரிந்துரைகளைத்திருத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நுண்ணுயிரியல் மூத்த பேராசிரியர் பேராசிரியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான நிபுணர் குழு அளித்த பரிந்துரைகளில் முந்தைய பரிந்துரைகள் மற்றும் இறந்த உடல்களை பிரத்தியேகமாக தகனம் செய்வது குறித்த வழிகாட்டுதல்களில் உறுதியாக இருந்தபோதும், அந்த நேரத்தில் புரிந்துணர்வை அடிப்படையாகக் கொண்ட அகற்றும் முறையாக, நிபுணர் குழு உடல்களை அகற்றுவதற்கான பரிந்துரைகளை திருத்தியுள்ளது. அத்துடன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தல் தொடர்பில் குழு பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது.

இதனிடையே கொவிட் தொற்றுக்குள்ளான முஸ்லிம் பூதவுடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிப்பதா என்பது தொடர்பில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள சுகாதார அமைச்சில் கூடிய நிபுணர்கள் குழுக்கள் இரண்டின் உறுப்பினர்களும் எவ்வித இணக்கமும் இன்றி வெளியேறியதாக மற்றொரு செய்தி தெரிவித்துள்ளது.

அதில் ஒரு குழு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் நியமிக்கப்பட்ட நிலையில், மற்றைய குழு கொவிட் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்ணான்டோபுள்ளேவினால் நியமிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சரின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றிருந்தது.


No comments