பிரதேச சபை தலைவர்கள் வீட்டிற்கு:ஆளுநர் அதிரடி?


ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மண் பிரதேசமான வெலிகந்தை பிரதேச சபையின் தலைவர் பிரியந்த அபேசூரியா மற்றும் ரம்பேவா பிரதேச சபையின் தலைவர் அஜித் பிரசன்னா தென்னகூன் ஆகியோரை வட மத்திய மாகாண ஆளுநர் இடைநீக்கம் செய்துள்ளார்.

ஊள்ளுராட்சி சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் நிதி மோசடி குற்றங்கள் தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் ஆளுநர் மஹீபால ஹெரத் இருவரையும் இடைநீக்கம் செய்துள்ளார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட தலைவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சமன் விக்ரமராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர்களது இடைநீக்கம் தொடர்பான அறிவிப்பு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.


No comments