முள்ளிவாய்க்கால் தூபி இடிப்பு: துணைவேந்தர் அணைப்பு!

யாழ்.பல்கலைக்கழக வளவினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால்

நினைவேந்தல் தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசின் உத்தரவின் பேரில் பல்கலைக்கழக ஊழியர்களால் இடித்தழிக்கப்படுகிறது.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் அண்மையில் படையினர் நேரடியாக வருகை தந்து துணைவேந்தர் சகிதம் தூபிகளை பார்வையிட்டிருந்த நிலையில் பரபரப்பு தொற்றியிருந்தது.

ஆனாலும் தன்னிடம் நட்புடன் வந்த படை அதிகாரிகள் என விளக்கமளித்த துணைவேந்தர் அங்கு அமைக்கப்பட்டுள்ள போரில் உயிரிழந்தவர்கள் நினைவுதூபியை பார்வையிட்டதாக விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையிலேயே இ;ன்றிரவு முள்ளிவாய்க்கால் தூபி இடித்தழிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் துணைவேந்தரை தொடர்புகொள்ள முற்பட்ட போதும் அவரது கைத்தொலைபேசி அணைக்கப்பட்டுள்ளது.


No comments