ஜப்பானிற்கு முடியாதெனில் ஏன் இந்தியாவிற்கு முடியாது?



 ஜப்பான் நாட்டுடனான ஒப்பந்தங்களை, இலங்கை அரசாங்கத்தால் நிறுத்த முடியுமாயின் இந்தியாவுடனான ஒப்பந்தங்களை அரசாங்கத்தால் ஏன் நிறுத்த முடியாது என வன்முறையை தோற்கடிப்பதற்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் உலப்பனே சுமங்கல தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுபீட்சமான நாடெனும் தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்திலும் அதே போல் கடந்த தேர்தல் காலப்பகுதியிலும் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அனைவரும் குறிப்பிட்ட ஒரு பொதுவான கருத்தின் அடிப்படையிலும் நாட்டின் எவ்வித தேசிய சொத்துக்களும் வெளிநாடுகளுக்கு விற்கப்படவோ அல்லது குத்தகைக்கு வழங்கப்படவோ மாட்டாதென்று தெரிவித்தனர்.

இதனாலேயே 69 இலட்சம் மக்களின் ஆணையை பெற்றுக்கொடுத்து ஆட்சியை ஒப்படைத்தனர்.

அனால் இன்று அவற்றை மறந்து செயல்படுகினறனர்.

இன்று ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் பொதுவான கருத்து யாதெனில் கடந்த ஆட்சிக் காலத்தின் போது இந்தியாவுடனும், ஜப்பானுடனும் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த முனையத்தை இந்தியாவுக்கு வழங்க நேர்த்துள்ளதென தெரிவிக்கின்றனர்.

இது ஒரு பொருத்தமற்ற காரணமாகும்.

ஏனெனில் கடந்த அரசாங்கத்தின் மூலம் இலங்கைக்கு அதிகபட்சமான இலாபத்தை ஈட்டித்தரும் விமான ரயில் திட்டத்தை ஜப்பானுக்கு வழங்க ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டு இறுதி நிலையை அடைந்திருந்த போதிலும் அதனை இந்த அரசாங்கம் முறியடித்தது.

இதனால் ஜப்பானுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய ஒரு நிலையும் தோன்றியது.

விமான ரயில் திட்டத்தில் அரசாங்கம் தலையீடு செய்து அதனை வழங்க மறுப்புத் தெரிவிக்க முடியுமெனில் ஏன் அதே போன்றதொரு செயலை இந்தச் செயற்பாட்டில் செய்ய முடியாது.?

இதனால் தெளிவாக வெளிப்படுவது யாதெனில் அரசாங்கம் எந்தளவுக்கு மோசடிகளை செய்து மக்களை ஏமாற்றுகின்றது என்பதேயாகும் எனத் தெரிவித்தார்.

No comments