பருத்தித்துறையில் இரண்டு?பருத்தித்துறையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்திலிருந்து திரும்பிய இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்த நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்டிருந்த பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே பருத்தித்துறையில் உள்ள திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால்  இழுத்து மூடப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் முன் அனுமதி பெறாமை கொரோனர் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி இயங்கியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழேயே குறித்த திரையரங்கு இழுத்து மூடப்பட்டுள்ளது.

திரையரங்கில்  சமூக இடைவெளி பேணாமலும் முகக்கவசங்களை சரியாக அணியாமலும் பெருமளவானோர் ஆபத்தான நிலையில் ஒன்றுகூட  இடமளிக்கப்பட்டுள்ளது.அதனாலேயே அந்தத் திரையரங்கு இழுத்து மூடப்பட்டுள்ளது.


No comments