குருந்தூர் மலைக்கும் புத்தர் வந்தார்?முல்லைதீவு குருந்தூர் மலை,  ஆதி சிவன் கோவிலுக்கு சொந்தமான நிலப்பரப்பில் தொல் பொருள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் முல்லைத்தீவு குருந்தூர் மலையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்று வருவதாக புகார்கள் எழுந்திருந்தன.

படையிரின் ஏற்பாட்டில் குருந்தூர் மலையில் இன்று இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க பிரசன்னத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் புத்தர் சிலை நிறுவப்பட்டு வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் படையினரது ஏற்பாட்டில் ஆலய சூழல் துப்புரவு செய்யப்பட்டிருந்தது.


ஏற்கனவே அப்பகுதியில் வழிபாடு தவிர்ந்த கட்டுமானப்பணிகள் எதனையும் முன்னெடுக்க கூடாதென முல்லைதீவு நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments