யாழ்.பல்கலைக்கழகத்தின் சுயாதீனம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது?


இறந்தவர்களை  நினைவு  கூரும்  நினைவுச்  சின்னம்” அழிக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்  சங்கம் தனது கவலையினை பதிவு செய்துள்ளது.

இது தொடர்பில் இன்றிரவு ஆசிரிய சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்  எமது  யாழ்ப்பாண  பல்கலைக்கழகத்தில்  அமையப்  பெற்றிருந்த இறந்தவர்களை  நினைவு  கூரும்  நினைவுச்  சின்னத்தினை  கடந்த 08ம் திகதி   வெள்ளிக்கிழமை  அன்று  இடித்து  அழிக்கப்பட்ட நிகழ்வும்  அதனைத்  தொடர்ந்து  பல்கலைக்கழக  சூழலில் தொடர்ச்சியாக  ஏற்பட்டு  வரும்  சம்பவங்களும்  பல்கலைக்கழக ஆசிரியர்களாகிய  எங்களை  மிகவும் மனவேதனைக்குட்படுத்தியிருக்கின்றது.

எமது பல்கலைக்கழத்தின் மீது தொடர்ச்சியாக பிரயோகிக்கப்பட்டு வருகின்ற  அழுத்தங்கள்  பல்கலைக்கழகத்தின்  சுயாதீனம்  மற்றும் தனித்துவம்  என்பவற்றை  வெகுவாகப்  பாதிக்கின்றமை ஆசிரியர்களாகிய எங்களை மேலும் கவலைக்குட்படுத்துகின்றது.  இது  தொடர்பான  மேலதிக  விடயங்கள்  தொடர்பாக  விசேட பொதுக் கூட்டத்தில் கலந்துரையாட உள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments