சுமந்திரன் சாணக்கியன் தனிமையில்?

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் நெருங்கிய

தொடர்புடையவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

ரவூப் ஹக்கீம் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டார் .

இதன்படி ஹக்கீமுடன் நெருங்கிய தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு அவர்களை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த சி.சி.ரிவி காட்சிகளைப் பார்வையிட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன்,இரா.சாணக்கியன் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது.

No comments