கோத்தா அல்வா ரெடி!கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்தை, இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, ஓமல்பே சோபித தேரர் குற்றஞ்சாட்டுகின்றார்.

கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கப் போவதாக வெளியாகும் செய்திகளையடுத்து, பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையிலேயே, சோபித தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

எம்பிலிபிட்டிய பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, துறைமுகத்தின் கிழக்கு முனையத்தையோ அல்லது மேற்கு முனையத்தையோ வெளிநாடுகளுக்கு வழங்குவது பாரதூரமான விடயமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய வளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற விடயத்தில், எந்தவொரு பகுதியும் விற்பனை செய்யப்படக் கூடாது என ஓமல்பே சோபித தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

No comments