மட்டக்களப்பில் வாவியில் சடலம் மீட்பு!


மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பிரிவிலுள்ள கண்ணகி அம்மன் ஆலய வீதியிலுள்ள வாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (31) மீட்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து காவல்துறையினரால் இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமைய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments