நவால்னிக்கு ஆதரவாக புதிய போராட்டங்கள் ஆயிரக்கணக்கானோர் கைது!


சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை விடுவிக்கக் கோரி ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.

போராட்டங்களில் பங்கெடுத்த 3000 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காவலில் வைக்கப்பட்டவர்களில் நவல்னியின் மனைவி யூலியா நவல்னாயாவும் இருப்பதாக ரஷ்ய எதிர்க்கட்சியின் கூட்டாளிகள் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை விடுவிக்க அடுத்தம் கொடுக்கம் வகையில் இப்போராட்டங்கள் நடைபெறுகின்றன.   

தலைநகர் மொக்கோவில் போராட்டக்காரர்களைத் தடுப்பதற்காக நிலக்கீழ் தொடருந்து நிலையங்கள் மூடப்பட்டு போராட்டக்காரர்கள் தக்கப்பட்டனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. 

No comments