50ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்பு! பொருளாதார பாதிப்பால் ஆட்டம் காணும் ஜெர்மன்!


கொரோன தோற்று ஜெர்மனியில் பரவத் தொடங்கியதிலிருந்து  வைரஸின் தாக்கத்தினால் 50,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளதாக ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் நோய் கட்டுப்பாட்டு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

இறுதித் தகவலின் படி கடந்த 24 மணி நேரத்தில் 859 பேர் வைரஸால் இறந்துள்ளனர், இது மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை 50,642 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் முதல் அலைகளால் ஜெர்மனி குறைவான பாதிப்புக்களோடு தப்பிப்பிழைத்தது, ஆனால் இரண்டாவது அலை ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள ஜெர்மனி தற்போதைய பாதிப்பினால் கடுமையாக பாதித்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

 இந்நிலையில் தொடரும் கடும் தொற்றுக்களில் இருந்து பதுகத்துகொள்ள  நாட்டின் பொது முடக்க்ததினை பிப்ரவரி 14 வரை நீட்டித்து அதிபர் அங்கேலா மேர்க்கெல் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தது.

No comments