வாள் வெட்டு கொள்ளை:ஒருவர் அகப்பட்டார்?


மருதங்கேணி செம்பியன்பற்று வடக்கு மாமுனைப்பகுதியில் நேற்றிரவு குடும்ப பெண் மீது வாள் வெட்டு நடத்தப்பட்டு கொள்ளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.கணவன் முன்னாள் அரசியல் கைதியாக இருந்து விடுவிக்கப்பட்டவரெனவும் தற்போது மனைவியுடன் மருதங்கேணி செம்பியன்பற்று வடக்கு மாமுனைப்பகுதியில் வசித்துவரும் நிலையில் கொள்ளை அரங்கேற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் சுலக்சன் டேனுஜா என்ற இளங்குடும்ப தலைவி கழுத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

இதனிடையே எட்டு பேர் கொண்ட கொள்ளையர்களில் ஒருவனை இன்று சாவகச்சேரியில் வைத்து காவல்துறை கைது செய்துள்ளது.சுமார் 26 இலட்சம் பெறுமதியான நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.


No comments