பெண்களுக்கெதிரான வன்முறைக்கு ஆண்மை நீக்கும் சட்டத்துக்கு ஒப்புதல்!


பாகிஸ்தானில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்து வருகிறது.கடந்த சில நாட்களாகவே அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது, இதையடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்து,இதற்கான சட்ட விதிமுறைகள் தயாரிக்கப்பட்டன.

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆணுக்கு அவரது ஆண்மை தன்மையை குறைக்கவோ அல்லது நீக்கவோ ரசாயன மருந்து கொடுக்கப்படும் என்ற அவசர சட்டத்திற்கு பிரதமர் இம்ரான் கான் கடந்த மாதம் ஒப்புதல்அளித்தார்,மேலும் இந்த குற்றவாளிகளுக்கு 10 முதல் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்கப்பட்டு ஆண்மை தன்மையை நீக்கவும் சட்டம் இயற்றப்பட்டது.

அதனைத்தொடர்ந்து,இந்த அவசர சட்டத்திற்கு நேற்று ஒப்புதல் அளித்த அதிபர் ஆரிப் ஆல்வி தனது ட்விட்டர் பக்கத்தில்,குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளை விரைவுபடுத்த இந்த அவசர சட்டம் உதவும் என்றும்,நாடுமுழுவதும் இந்த வழக்குகளை உடனடியாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும்,பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வெளியிடுவது சட்டப்படி குற்றம் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments