கடத்தப்பட்ட 300 மாணவர்களும் விடுதலை!!


வடமேற்கு நைஜீரியாவில் உள்ள பள்ளியிலிருந்து கடந்த வாரம் கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்சினா மாநில ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் இது குறித்துத் தெரிவிக்கையில், 300 பேர் விடுவிக்கப்பட்டனர் என்றும் அவர்கள் அனைவரும் நல்ல நிலையில் உள்ளனர் என்றும் கூறினார்.

இருப்பினும், சில ஊடகங்கள் சிறைபிடிக்கப்பட்டவர்களில் சிலர் இன்று விடுவிக்கப்படவில்லை எனக் கூறுகின்றன.

இக் கடத்தலை இஸ்லாமிய போராளி குழு போகோ ஹராம் நடத்தியிருந்தது. அவர்கள் சில சிறுவர்களைக் காட்டும் காணொளியையும் வெளியிட்டனர்.

சிறுவர்களை பிராந்திய தலைநகரான கட்சினா நகரத்திற்கு அழைத்துச் செல்வதாகவும், விரைவில் அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைவதாகவும் செய்தித் தொடர்பாளர் அப்துல் லாபரன்  கூறினார்.

போகோ ஹராம் வெளியிட்ட காணொளி உண்மையானது என்று அவர் கூறினார்.

மாணவர்கள் கடத்தப்பட்ட எண்ணிக்கை தொடர்பில்அதிகாரிகள் முன்னர் தெரிவித்த எண்ணிக்கையை விட தற்போது குறைந்த எண்ணிக்கையை வழங்கியுள்ளனர். எனினும் கடத்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா அல்லது விடுவிக்கப்பட்டார்களா என்பது தெளிவாக இல்லை.

மாநில ஆளுநர் அமினு பெல்லோ மசாரி சர்வதேச ஊடகத்திற்கு தெரிவிக்கையில்:- நாங்கள் பெரும்பாலான சிறுவர்களை மீட்டெடுத்துள்ளோம். அது அவர்கள் அனைவருமே அல்ல என்று கூறியள்ளார்.

கடத்தப்பட்ட சிறுவர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று திரு லாபரன் கூறினார். காணொளியில் காட்டப்பட்டுள்ள ஒரு சிறுவன் நைஜீரிய போர் விமானங்களால் சிலர் கொல்லப்பட்டதாகக் கூறினார்.

சிறுவர்களின் விடுதலை எப்படி வந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments