முல்லைத்தீவில் நடைபெற்ற ஆழிப்பேரலை நினைவேந்தல்கள்

ஆழிப்பேரலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தலகள் இன்று சனிக்கிழமை கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக

நினைவேந்தலப்பட்டது. 

அத்துடன் முல்லைத்தீவு பங்குதந்தை அருட்பணி ஜாவிஸ்  தலைமையில்  இன்று  காலை   விசேட ஆராதனைகளும் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.யாழ்  மறைமாவட்ட குரு முதல்வர்  அருட்பணி ஜெபரட்ணம்   அவர்களால்  திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.

நிகழ்வில் அருட்தந்தையர், அருட்சகோதரிகள் ,அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், சுனாமியில் காவுகொள்ளப்பட்டவர்களின் உறவுகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கண்ணீர் மல்க தமது அஞ்சலிகளை செலுத்தினர். 

No comments