உறுதியானது பிரான்ஸ் அதிபருக்கு கொரோனா தொற்று!


பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

42 வயதான மக்ரோனுக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிளை அடுத்து பி.சி.ஆர் பரிசோதனை செய்து  பரிசோதிக்கப்பட்டார். இப்போது ஏழு நாட்கள் சுயமாக தனிமைப்படுத்தப்படுவார் என்று எலிசி அரண்மனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவர் நாட்டை நடத்துவதற்கு இன்னும் பொறுப்பில் இருக்கிறார். தொலைதூரத்தில் இருந்து செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து நாட்டில் கிட்டத்தட்ட 2.5 மில்லியனுக்கும் அதிகமானோர் தொற்றுக்கு உள்ளாகியமை பதிவாகியுள்ளன. 59,400 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

பிரான்ஸ் தனது கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை டிசம்பர் 27 முதல் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

No comments