பிரான்சில் இடம்பெற்ற ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்வு!

ஆழிப்பேரலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பணிமனையில் இன்று சனிக்கிழமை பகல் இடம்பெற்றது.

பிரான்சு அரசின் கொரோனா சட்ட திட்டங்களுக்கு அமைவாக இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளின் நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
No comments