எவரெஸ்ட் மலையின் உயரம் 0.86 மீற்றரால் அதிகரிப்பு


உலகின் மிக உயர்ந்த சிகரமாக கருதப்படும் எவரெஸ்ட் சிகரம், இதற்கு முன் கணக்கிடப்பட்டதை விட 0.86 மீ உயரமாக உள்ளதாக சீனாவும் நேபாளமும் தெரிவித்துள்ளன.

எவரெஸ்ட் சிகரம் நேபாளத்தில் அமைந்துள்ள போதும், அதன் உயரத்தை கணக்கிடாத நேபாள அரசு, 1954 ஆம் ஆண்டு இந்திய ஆய்வு மையம் அளித்த தகவலின் அடிப்படையில் எவரெஸ்டின் உயரத்தை 29,028 அடி என குறிப்பிட்டு வந்தது. அதே சமயம் சீன அரசோ, இந்தியா குறிப்பிட்டதை விட 11 அடிகள் குறைவாக உள்ளதாக தெரிவித்தது.

இந்நிலையில், தற்போது நேபாளமும், சீனாவும் எவரெஸ்டின் உயரத்தை 8,848.86 மீ (29,032 அடி) என ஒரு மனதாக தீர்மானித்துள்ளன. 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் எவரெஸ்டின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என மலையேற்ற வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments