பட்டினியால் வாடும் பசுக்கள்?



வன்னியில் உணவின்றி உயிர் விடும் மாடுகள், சேலைன் ஏற்றியும் காப்பாற்ற முடியவில்லை என கண்ணீர் விடும் உரிமையாளர்கள் பரிதாபம் கிளிநொச்சியில் அரங்கேறியுள்ளது.

கிளிநொச்சி கோணாவில் பிரதேசத்தில் 500 மாடுகள் வரை வளர்க்கும் த. சுவேந்திரன் என்பவரது மாடுகள் தற்போது போதிய உணவின்றி இறந்து வருகின்றன. என அவர் கண்ணீருடன் தெரிவிக்கின்றார்.

தற்போது மாடுகளை மேச்சலுக்கு விட முடியாத நிலைமை கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ளது. எங்கும் நெற்பயிர்ச் செய்கை, குளங்களும் நிரம்பியிருக்கிறது. எனவே மாடுகளை மேச்சலுக்கு விட முடியாத நிலைமை காரணமாக போதுமான உணவின்றி இறந்து வருகின்றன. இதுவரை  எட்டு மாடுகள் இறந்த விட்டன. பல மாடுக்களுக்கு சேலைன் ஏற்றப்பட்டுகொண்டிருக்கிறது. அவையும் தப்பி பிழைக்கமா என்பது சந்தேகமே. என வேதனையுடன் தெரிவிக்கின்றார்.

சுரேந்திரனின் தந்தையை ஆட்டுக்கார தங்கவேல் அல்லது மாட்டுக்கார தங்கவேல் என்றே ஊரவர்கள் அழைப்பர். அந்தளவுக்கு அவர்கள் ஆயிரக்கணக்கில் கால்நடைகளை வளர்த்தவர்கள் ஒரு காலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments