கனடாவில் நாளை காலை 10: 30 மணி முதல் தொழில் முனைவோருக்கான பயிற்சிப்பட்டறை


கனடாவில் 12-19-2020 சனிக்கிழமை காலை 10: 30 மணிமுதல் நடைபெறவிருக்கும் தொழில்முனைவோருக்கான பயிற்சிப்பட்டறை

புpரம்ரன் தமிழ் ஒன்றியம் இரண்டாவது ஆண்டாக நடத்தவிருக்கும் StartNext-2020 நிகழ்வானது உலகெங்கும் உள்ள இளந் தொழில் முனைவோருக்கான அரிய சந்தர்ப்பமாகும். ஊக்குவிப்பும் தகுந்த வழிகாட்டலும் இன்மையால் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவர முடியாமலிருக்கும் இளையோருக்கான பயிற்சிப்பட்டறைகள் விளக்கவுரைகள் கொண்ட ஒரு நாள் நிகழ்வாகும். கடந்த வருடம் முதன்முறையாக இந்த நிகழ்வானது பிரம்ரன் நகரசபை மண்டபத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. கனடாவில் பெரிதும் வெற்றிகரமாக இயங்கிவரும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் கலந்துகொண்டு தங்கள் வெற்றிப் பயணத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவிருப்பது சிறப்பம்சமாகும்.

ஓன்ராரியோ மாகாண அரசின் சிறுவணிகத்துறை அமைச்சர் கௌரவ Prabmeet Sarkaria அவர்கள் தொடக்கவுரையாற்றி ஆரம்பித்து வைக்கவிருக்கும் இந்நிகழ்வை பிரம்ரன் மாநகர நகரபிதா கௌரவ Patrick Brown அவர்கள் நிறைவுரையாற்றிச் சிறப்பிக்கவுள்ளார்;. மேலும் நிகழ்வின் பேச்சாளர்கள் அனைவரும் வணிகத்துறையில் மிகச்சிறந்த அனுபவசாலிகள் ஆவர்;. பேச்சாளர்கள் தெரிவானது தொழில் முனைவோருக்கு உடனடிப் பயனளிக்கும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது.

சிறுவணிகக்கடன் வழங்கும் கனடாவிலுள்ள நிதி நிறுவனங்களில்; முக்கிய பதவி வகிப்பவர்கள் இளந் தொழில் முனைவோருக்கு வியாபார நிறுவனங்களைத் தொடங்குவதற்கான வங்கிக்கடன் பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்குவதுடன் வர்த்தக நிறுவனங்களை வெற்றிகரமாகத் தொடர்வதற்கான வழிமுறைகளையும் தங்கள் சிறப்புரைகள் மூலம் வழங்கவுள்ளனர். இவை அனைத்துpற்கும் சிகரம் வைத்தாற்போல் எமது தாயகத்தைச் சேர்ந்த இளம் விஞ்ஞானிகள் கலந்துகொண்டு தமது கண்டுபிடிப்புக்களைப் பற்றி உரையாற்றவுள்ளார்கள்.

உங்கள் பெயர்களைப் பதிவு செய்யுங்கள்!  பங்கு பற்றுங்கள்!  பயன்பெறுங்கள்!

startnext.ventures@gmail.com

www.StartNext.Ventures     


No comments