பைசர் கொரோன தடுப்பூசியால் பக்கவிளைவு !


அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார பணியாளர்களுக்கு பக்கவிளைவு (அலர்ஜி) ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் பைசர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இருவருக்கு அலர்ஜி
ஏற்பட்டதை அடுத்து, உணவு மற்றும் மருந்துகளால் பக்கவிளைவு (அலர்ஜி)ஏற்படுபவர்கள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியது.

இந்நிலையில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தை சேர்ந்த சுகாதார பணியாளர்கள் இருவருக்கு, பைசர் தடுப்பூசியை போட்டுக்கொண்ட பின் தீவிர பக்கவிளைவு (அலர்ஜி) பிரச்னையால் பாதிக்கப்பட்டதாகவும், தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து அவர்கள் நலமாக இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

No comments