பருத்தித்துறையில் கடைகள் மூடப்பட்டன?

பருத்தித்துறை நகர்ப்பகுதியில் கட்டுப்பாடுகளை மீறி மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட் வியாபாரிகளால் பருத்தித்துறை மீன்

சந்தை, மூடப்பட்டுள்ளது.அத்துடன், சுகாதார நடைமுறைகளை மீறிச் செயற்பட்ட இரு வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. அத்துடன்  சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்ட வியாபாரிகளை பருத்தித்துறை பொதுசுகாதார பரிசோதகர்கள் அவ்விடத்தை விட்டு உடடியாக அப்புறப்படுத்தியுள்ளனர்.

கொரோனா பரவல் சந்தைகளூடாக யாழ்ப்பாணத்தில் ஊடுருவியுள்ள நிலையில் மாகாண சுகாதார சேவகள் பணிப்பாளரின் வழிகாட்டலுக்கமைய வடமாகாணத்தில் அனைத்துப் பொது சந்தைகளும் மூடப்பட்டன. வியாபாரிகளை சமூக இடைவெளியுடன் கொறோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி சந்தை மற்றும் அதன் வீதியோரம் தவிர்ந்த பகுதிகளில் மரக்கறி மற்றும் மீன் வியாபாரம் செய்ய பருத்தித்துறை நகரசபை அறிவுறுத்தியிருந்தது. 

இதுகுறித்து ஒலிபெருக்கியூடாகவும் தொடர்ந்து அறிவுறுத்தியும் அதனைப் புறக்கணித்து சந்தை அருகேயுள்ள சந்தை வீதியில் அதிகளவான மீன் மற்றும் மரக்கறி வியாபாரிகள் நெருக்கமாக ஒன்று கூடியதால் சன நெரிசல் ஏற்பட்டு கொரோனா  பரவலுக்கு ஏதுவான நிலமை தோன்றியதால் அது மூடப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர்ப்பகுதியில்  கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி சில வர்த்தக நிலயங்கள் செயற்படுவதாக பொதுமக்களிடமிருந்து கிடத்த முறைப்பாட்டிற்கமைய மேற்கொண்ட பரிசோதனையைத் தொடந்து இரு வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments