மீண்டும் கூட்டு சதி?

அடுத்த மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக

புதிய பிரேரணை ஒன்றைக் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து இதற்கான ஆரம்பகட்ட களப் பணிகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளன என்று சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய ஐ.நா. தீர்மானத்திலிருந்து விலகியதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இதனையடுத்து இலங்கைக்கு எதிராக ஒரு புதிய தீர்மானத்தைச் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழ் மக்களின் பிரச்னைகள் தொடர்பில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தீர்வு காண்பதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைந்து செயல்பட வேண்டிய காலம் வந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

No comments