சுமந்திரன் திருந்தமாட்டார்: கஜேந்திரகுமார்?


அரசு ஆதரவு நிலைப்பாட்டில் செயல்படுகிற கூட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் இரட்டை வேடம் போடுகிறது. அரசைக் காப்பாற்றவே கால

அவகாசம் வழங்க கோருகின்றனர். அத்தகைய மகஜரில் முன்னணி கையெழுத்திடாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதை எல்லாம் பிடி கொடுக்காமல் நாசுக்காக செய்வதற்கு பழக்கப்பட்ட ஒருவராக எம்.ஏ.சுமந்திரன் இருந்தாலும் அவருடைய அத்தகைய போக்குகளை ஆரம்பத்திலிருந்தே எங்களைப் போன்றவர்கள் புரிந்து 

கொண்டு மக்களுக்கு அம்பலப்படுத்தி வந்திருக்கின்றோம். ஆனாலும் அத்தகைய செயற்பாடுகளையே அவர் இன்றைக்கும் செய்து வருகின்றார எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஜநாவில் இலங்கைக்கு மீண்டும் கால அவகாசமொன்றை பெறும் முயற்சி தொடர்பிலேயே கஜேந்திரகுமார் இ;வ்வாறு தெரிவித்துள்ளார்.


No comments