வாசுதேவா புறப்பட்டார் பழைய வாகனத்தில்?


இடது சாரி அல்லது வலதுசாரியென சாயம் பூசிக்கொண்ட தென்னிலங்கை அரசியல்வாதிகளது சாயம் வெழுத்தே வருகின்றது.

கோத்தபாய புதிய வாகனங்கள் தேவையில்லை, இருக்கின்ற வாகனங்களை திருத்தி மேலும் 10 வருடம் பயன்படுத்த சொல்ல அதனை தலைமேல் கொண்டு வாசுதேவ நாணயக்கார புதிய முயற்சி ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

தேவையற்ற செலவுகளை தவிர்க வேண்டுமென கோத்தபாய கூறியிருந்ததையடுத்து வாசுதேவ நாணயக்கார தன்னுடைய அமைச்சகத்திற்கு தேவையான வாகனங்களை, கைவிடப்பட்ட வாகனங்களை தெரிந்து அவற்றை சீர் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளாராம்.

அவற்றில் ஒரு வாகனம் இன்று சீர் செய்யபபட்டு அமைச்சர் அவர்களிடம் கையளிக்கப்பட்டும் விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசை மீண்டும் ஆட்சிக்கதிரை கொண்டுவர வாசுதேவவும் ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments