முல்லையில் மேலுமொரு மீனவர் சடலமாக மீட்பு?


நந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இன்று காலை அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நேற்றைய தினம் பொன்னாலையில் மீன்பிடிக்க சென்றிருந்த மீனவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது சம்பவமாக முல்லையில் மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புரவி புயல் காரணமாக காணாமல் போயிருந்த நான்கு மீனவரில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments