தேனிலவு காலம்:டக்ளஸ் அமெரிக்க தூதர் சந்திப்பு!யாழ்ப்பாணத்திற்கு அமெரிக்க தூதர் வருகை தருகின்ற வேளையில் எல்லாம் துரத்தி துரத்தி ஈபிடிபி ஆர்ப்பாட்டம் செய்த காலம் சென்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்ன் பி ரெப்லிட்ஸ் அம்மணி, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தேடிச்சென்று கொழும்பு அலுவலகத்தில் சந்திக்கும் கட்டம் மாறியுள்ளது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில், காலநிலை மாற்றத்தினை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ள தீர்மானித்துள்ள வேலைத் திட்டங்களில் கடற்றொழில் அமைச்சு சார்பாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக அவரது அமைச்சு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக அமெரிக்க தூதரக ஆவணங்கள் விக்கிலீக்ஸ் மூலம் அம்பலப்படுத்தப்பட்ட போது அதனை முன்னெடுத்த தூதரக அதிகாரிகளை இலக்கு வைத்து ஈபிடிபி ஆதரவாளர்கள் சகிதம் போராட்டங்களை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.


No comments