மட்டக்களப்பில் மின்னல் தாக்கி உயிரிழந்தன பல மாடுகள்


மட்டக்களப்புப் பிரேதச செயலகப்பிரிவில் மின்னல் தாக்கி பல மாடுகள்  உயிரிழந்துள்ளன. நேற்று சனிக்கிமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த காலங்களாக பேசப்பட்டு வரும் மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரம் இன்று குறித்த சம்பவத்திற்கு வழிவகுத்துள்ளது.

மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் மூலமாக சிங்கள குடியேற்றவாசிகள் விவசாயம் செய்வதற்காக மேச்சல் தரையை கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களின் அனுசரணையுடன் குறித்த இடங்கள் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது.

அதனால் கால்நடைகள் அனைத்தும் நிற்கதியான நிலை உருவாகியது. இதன் முதற்கட்டமாக இரண்டு இலட்சம் மாடுகள் மூலம் இலங்கை நாட்டுக்கு பொருளாதாரத்தை உயர்த்திய பண்னையாளர்களக்கு குறித்த விவசாய நடவடிக்கை காரணமாக தங்களது கால்நடைகளை அங்கிருந்து அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஆகவே 15 பண்ணையாளர்கள் வாழ்வாதாரம் இழந்த நிலையில் தங்களது கால்நடைகளுடன் மட்டக்களப்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரிவுகளுக்கு வந்துள்ளனர். இந்நிலையில் மின்னல்தாக்கி குறித்த பண்ணையாளர் ஒருவரின் மாடுகள் மின்னல்தாக்கி உயிரிழந்துள்ளன.


No comments