ஜேர்மனியில் நடைபதையில் மகிழுந்து புகுந்ததில் ஐவர் பலி! 14 பேர் படுகாயம்!


மேற்கு ஜேர்மனிய நகரமான ட்ரியரில் (Trier) அங்காடிகள் நிறைந்த நடைபாதையில் மகிழுந்து ஒன்று புகுந்ததில் ஒன்பது வாரக் குழந்தை உட்பட நான்குபேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர் என அரச சட்டத்தரணி பீட்டர் ஃபிரிட்ஸன் தெரிவித்தார்.

51 வயதான ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான ஓட்டுநர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கணிசமான அளவு மது அருந்தியதாகவும், அவரை மனநல பராமரிப்பில் வைக்குமாறு கோருவது குறித்து வழக்குரைஞர்கள் பரிசீலித்து வருவதாக ஃபிரிட்ஸன் கூறினார்.

நேற்று செவ்வாய்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 13:45 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. ஓட்நர் 1 கி.மீ வேகத்தில் வாகனத்தை ஓட்டியுள்ளார்.

25 வயது பெண் மற்றும் 45 வயது ஆணும் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட ஐந்தாவது நபர் குறித்த விவரங்களை காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.

உயிரிழந்த குழந்தையின் தாய் காயமடைந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.No comments