தமிழகத்திலிருந்து மீண்டும் கப்பல் சேவை?


கொவிட் – 19 காரணமாக நாடு திரும்ப முடியாமல் இந்தியாவில் காத்திருக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர விசேட கப்பல் சேவை திட்டமிடப்பட்டுள்ளது.

பல்வேறு தேவைகளின் நிமித்தம் குறுகிய கால பயண ஏற்பாடுகளுடன் இந்தியாவிற்கு சென்ற சுமார் 1500 இற்கும் மேற்பட்ட இலங்கை பிரஜைகள் கொவிட் – 19 பரவலினால் ஏற்பட்ட போக்குவரத்து தடங்கல் காரணமாக நாட்டிற்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.


இந்திய உயர்ஸ்தானிகருக்கும் வெளிநாட்டு அமைச்சர் மற்றும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில், இந்தியப் பயணிகள் கப்பல் மூலம் கட்டம் கட்டமாக இந்தியாவில் தங்கியிருப்போரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு இந்திய உயர்ஸ்தானிகர் சம்மதம் தெரிவித்ததுள்ளார்.


அத்துடன், குறிப்பிட்ட தொகையினரை விமானம் மூலம் அழைத்து வருவது தொடர்பாகவும்,  அழைத்து வருவதற்கு முன்னர் இந்தியாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் இலங்கைக்கு வந்த பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு எற்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.


No comments