யாழில் பாடசாலைக்கும் வந்தது?இன்று புதன்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலை  ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் ஏழாலையைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பவர்களோடு பராமரிக்க வந்திருந்த உறவினர்கள் நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதனிடையே யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் சங்கானை பொதுச்சந்தை வர்த்தகர்கள் எண்மருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்றே தெல்லிப்பளை மகாஜாக்கல்லூரி மாணவிகள் இருவருக்கும் கொரோனா தொற்றுள்ளமை இன்றிரவு கண்டறியப்பட்டுள்ளது.இதனையடுத்து சக மாணவர்கள் 80பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

ஆனால் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களை இனங்காணும்வரை, தொற்று சமூகப் பரவலாக உருமாருவதைத் தடுக்கும் நோக்கில், தொற்றாளர்கள் அதிகமாகவுள்ள இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

வடக்கில் இன்னமும் கொரோனா கொத்தணிகள் உருவாகவில்லையென ஆளுநர் தெரிவித்துள்ளார்;. 


No comments