இலங்கையில் சுடும் அதிகாரத்துடன் காவல்துறை?



நாங்கள் நினைத்தால் வீதியில் வைத்தும் சுடுவோமென பொதுமக்களிற்கு சவால் விடுத்துள்ளது இலங்கை காவல்துறையின் காங்கேசன்துறை விசேட பிரிவு.

உடுப்பிட்டியில் வீதியால் பயணித்த பொதுமகன் ஒருவரை துப்பாக்கியால் சுடப்போவதாக பொதுவெளியில் இலங்கை காவல்துறை எச்சரிக்கை விடுத்தமை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை காவல்துறையின் காங்கேசன்துறையினை சேர்ந்த விசேட பிரிவினை சேர்ந்த பொலிஸாரே துப்பாக்கியால் சுடப்போவதாக மிரட்டியமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.

வீதியால் பயணித்துக்கொண்டிருந்த பொதுமகனை துரத்தி வந்து வழிமறித்துள்ள குறித்த காவல்துறையை சேர்ந்தவர் உடுப்பிட்டி சந்தியில் தாங்கள் இடைமறித்த போது தப்பித்து  வந்திருந்ததாக குற்றஞ்சுமத்தினார்.

ஏனினும் அதனை மறுதலித்த பொதுமகன் அருகாக உள்ள பேக்கரியில் வாங்கி வந்த பாணை காண்பித்து பேக்கரியில் அதனை கேட்டு உறுதிப்படுத்த கோரினார்.அத்துடன் தான் உடுப்பிட்டி சந்திக்கு வரவேயில்லையென தெரிவித்தார்.

இந்நிலையில் அவரை தூசணத்தால் திட்டி தீர்த்த காவல்துறையினர் துப்பாக்கியால் சுட தயாராகினர்.பின்னர் அவரது மோட்டார் சைக்கிளை தள்ளி வீழ்த்த முற்பட்டார்.

பின்னர் நூற்றுக்கணக்கான மக்கள் வேடிக்கை பார்த்திருக்க துப்பாக்கி முனையில் அவரை உடுப்பிட்டி சந்திக்கு அழைத்து சென்றிருந்தார்.

ஏனினும் தப்பித்து சென்றவர் இவரல்ல என உடுப்பிட்டி சந்தியில் நின்றிருந்த மற்றைய காவல்துறை அதிகாரி தெரிவித்ததுடன்  அவரை விடுவித்துள்ளார்.

குறித்த காவல்துறை அதிகாரியோ கையில் அடிப்பதற்கு தயாராக  கிரிக்கெட் விக்கெட் கொட்டனுடன் நின்றிருந்தார்.   

முhலை வேளையானால் மப்பும் மந்தாரமாக நடமாடுபவர்களால் வீதியில் இறங்க அச்சமடைந்துள்ளதாக மக்கள் அச்சந்தெரிவித்துள்ளனர். 


No comments