கொரோனோ :14 தமிழ் அரசியல் கைதிகளின் விபரம்!


யாழ்.போதனா வைத்திய சாலையின் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியும் , பளை வைத்திய சாலை வைத்திய அதிகாரியுமான வைத்தியர் சி. சிவரூபன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடையவர் எனும் குற்ற சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு , சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவை படுகொலை செய்ய முயற்சித்தமை தொடர்பிலான வழக்கில் நீதிமன்றில் குற்றவாளியாக காணப்பட்டு 300 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்து மத குருவான சி.ஐ. இரகுபதி குருக்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இவர்கள் இருவரும் உள்ளிட்ட 14 தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். என குரலற்றவர்களின் குரல் எனும் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் பெயர் விபரம்No comments