உடுவில் தடை நீக்கம்:அரசியல் அழுத்தமா?யாழ். மாவட்ட உடுவில் பிரதேச செயலகத்துக்குட்படட பகுதிகள் முடக்கப்பட்ட நிலையில் 24மணி நேரத்தில் அவ்வுத்தரவு நீக்கப்பட அரசியல் அழுத்தமே காரணமென சொல்லப்படுகின்றது.

பிறப்பிக்கப்பட்ட முடக்கம்  உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்கம் தளர்த்தப்படுகிறது என  வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் நேற்றிரவு தெரிவித்திருந்தார். 

அவர் அனுப்பிய செய்தி குறிப்பில் “உடுவில் பிரதேச செயலக பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட 398 குடும்பங்கள் இரு வாரம் தனிமைப்படுத்தலில் இருப்பர்,

மருதனார்மடம் சந்தை அதனைச்சூழவுள்ள பகுதி வர்த்தக நிலையங்கள் இரு வாரம் இயங்காது.

தெல்லிப்பளை மற்றும் உடுவில் கோட்டப் பாடசாலைகள் இரு வாரம் இயங்காது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகள் நேற்று முன்தினம் முதல் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 


அந்நிலையில், இன்று உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகள் முடக்கப்பட்டிருந்தன. தற்போது இன்று முதல் முடக்கம் தளர்த்த படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா பரிசோதனை அறிக்கைகள் தொடர்பில் குழப்பத்தை ஏற்படுத்திய தரப்புக்களது பின்னணியில் அழுத்தங்களால் அவசர அவசரமாக தடை நீக்கப்பட்டதாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.


தென்னிலங்கையில் புதிது புதிதாக முடக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உடுவில் தடை 24 மணிநேரத்தில் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


No comments