அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவிற்கும் கொரோனா?இலங்கையில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு பாதுகாப்பு வழங்கும் பிரமுகர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொலிஸ் திணைக்களத்தின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி, சிங்கள ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. 

அத்துடன், பொலிஸ் விசேட அதிரடிபடையைச் சேர்ந்த 264 பேருக்கும் இதுவரை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில், பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த ஆயிரத்து 277 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


நாடு பூராகவும் உள்ள 85 பொலிஸ் நிலையங்களில், கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த நிலையில், ஆயிரத்து 277 பொலிஸ் உத்தியோகத்தர்களில் தொள்ளாயிரத்து 25 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும், 352 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள

No comments