மீண்டும் தீவகத்திற்கு பயண கட்டுப்பாடு?


யாழ்.குடாநாட்டின் அனலைதீவு, எழுவைதீவிற்குள் நுழைவதற்கு உள்ளூர் வாசிகள் தவிர்ந்தோருக்கு கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.நாளாந்த படகு சேவையில் ஒரே தடவையில் 20 முதல் 30 பேர் மாத்திரமே பயணிக்க முடியும் எனவும் படகோட்டிகளுக்கு மாதாந்த கொரொனா தொற்று பரிசோதனை கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற படகு சேவை உரிமையாளர்கள், மற்றும் படகோட்டிகளுடான கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தீவுகளில் தனிமைப்படுத்த நேரிடும் போது சுகாதார, மருத்துவ, போக்குவரத்து வசதிகளை உடனடியாக வழங்குவதில் உள்ள இடர்பாடுகளை கருத்திற் கொண்டும் உள்ளூர் மக்களின் பாதுகாப்பு கருத்திற் கொண்டும் மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி பரா.நந்தகுமார் தெரிவித்தார்.

அத்தியாவசிய உத்தியோகத்தர்கள் மற்றும் மரண சடங்குகளிற்கு மகன்,மகள் உள்ளிட்ட மிக நெருங்கிய உறவுகள் செல்வதற்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தொற்று ஏற்படின் கடல் கடந்த தீவுகளில் ஏற்படக் கூடிய  மிகுந்த நெருக்கடி நிலை கருத்திற் கொண்டு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டு கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்;.


No comments