கொரோனா:இந்திய மீனவர்களை பொறுப்பேற்க பின்னடிப்பு!இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய இந்திய மீனவர்களினை பொறுப்பேற்க கடற்றொழில் நீரியல் வளத்துறை மறுதலித்துள்ளது.

கொரோனா தொற்றிற்குரிய போதிய பாதுகாப்பு தடுப்பு பொறிமுறை உடனடியாக இல்லாத காரணத்தினால் வெளிநாட்டு கைதிகளை பொறுப்பேற்க முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு கடலில் கைதான இந்திய மீனவர்கள்  22 பேரை எதிர் வரும் 18 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் அ.யூட்சன் உத்தரவிட்டுள்ளார். 

நெடுந்தீவு  கடற்பரப்பிற்குள் ஊடுருவிய இந்திய மீனவர்களில் 22 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தற்போது  கடற்படை முகாமில் தனியான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள்களை எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்தின் கீழ்  சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் அதிகாரம் மாவட்ட நீரியல்வளத் துறைத் திணைக்களத்திற்கு உரியது.

இதனால் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களையும் பொறுப்பேற்குமாறு கடற்படை மாவட்ட நீரியல் வளத்துறைத் திணைக்களத்தினரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கைக்கு பதிலளித்த மாவட்ட நீரியல் வளத்துறைத் திணைக்களத்தினர் எம்மிடம் கொரோனா தொற்றிற்குரிய போதிய பாதுகாப்பு தடுப்பு பொறிமுறை உடனடியாக இல்லாத காரணத்தினால் வெளிநாட்டு கைதிகளை பொறுப்பேற்க முடியாதெனப் பதிலளித்துள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை கடற்படை முகாமில்  தனிமகப்படுத்தளிற்கு உட்படுத்திய பின்பு  நீரியல்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட முடிவாகியுள்ளது. 


No comments