மருதனார் மடத்திற்கும் வந்தது?


யாழ்ப்பாணத்தின் முன்னணி வர்த்தக சந்தையான  மருதனார் மட சந்தையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில் 39 வயதுடைய வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளமை உறுதியாகியுள்ளது.யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இத்தகவலை தெரிவித்துள்ளார்.

இதனிடையே இவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் உறுதியாகவில்லை.

ஆயினும் தென்னிலங்கையிலிருந்து காய்கறிகள் நாள் தோறும் மருதனார்மடம் சந்தைக்கே எடுத்துவரப்படுகின்றது.

இதனிடையே கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த ஒருவர் மரணமடைந்துள்ளார். இது கிழக்கில் முதலாவது மரணமாக பதிவாகியுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவரெ நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.


No comments