மருதனார் மடம் கொத்தணியா?அச்சத்தில் யாழ்ப்பாணம்!மருதனார்மட சந்தையினை மூடுவதா? அப்பகுதியைமுடக்குவதா என்பது தொடர்பில் மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி ஆராய்ந்து முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருதனார்மட முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், மருதனார் மட சந்தையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் 39 வயதுடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது தொற்றுக்குள்ளானவருடன் நேரடி தொடர்புடையோருக்கு நாளைய தினம் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்  தெரிவித்துள்ளார். 

இவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் உறுதியாகவில்லை. எனினும் அவருடன் நேரடித் தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்தி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையினை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

மருதனார் மடத்தில் தொற்றுக்குள்ளானவர் சகல பிரதேசங்களிலும் நடமாடியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


No comments